இறைவன்
அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம் !!!
என் பதிவுகளை படித்த ஒரு வாசகரின் விருப்பத்திற்கு இணங்க என்னுடைய இந்த பதிவை
(மூன்றாவது பதிவை) நம் தாய் மொழியான தமிழ் மொழியில் பதிவு செய்கிறேன்.
கீழ்வரும் எனது பதிவில் ஏதேனும் பிழை இருந்தால் என்னை மன்னித்து திருத்துமாறு வேண்டுகிறேன்.
"இறைவன்"
சிலருக்கு இறை நம்பிக்கை உண்டு சிலருக்கு இல்லை.
ஏதேனும் ஒரு தருணம்
நம்பிக்கை வர காரணமாக அமையும் !! நம்பிக்கை இழக்கவும் சில தருணங்கள் அமையும் !!
அது அனைத்தும் அவர் அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கு இணங்க அமைத்திடும் .
இறைவன் என்றால் என்ன ??? இறைவன் என்று ஒருவர் உண்டோ?? இப்படியும் சிலர் கேள்வி கேட்பர் !! அவர்களுக்கு என்னுடைய பதில்
"ஒரு சக்தி நம் மனதை தூய்மை செய்து நல்வழியில் நடக்க வைக்கும் கண்ணுக்கு தெரியாத நம்பிக்கை தான் கடவுள்"
இறைவன் ஒருவரே நாம் அவரை வழிபடும் முறையும் இடமும் தான் வேறுபடுகிறது இதுவே என் கருத்து !!
இந்த தொகுப்பில் திடீரென நான் இறைவனை பற்றி கூற காரணம் என் சராசரி நாளில் நடத்த ஒரு சம்பவமே.
அச்சம்பவத்தை பற்றி கீழ்வரும் வரிகளில் கூறியுள்ளேன்...!!
அன்று ஒரு நாள் மாலை வேளையில் நானும் என் சில நண்பர்களும் உரையாடி கொண்டு இருத்தோம். அதில் ஒரு நண்பர் கிறித்துவ நண்பரை நோக்கி , "ஒரே கடவுள் 'இயேசு' பின்பு ஏன் உங்களுக்குள் பிளவு" ???
சிலர் இயேசு கடவுளை வணங்குகின்றனர் சிலர் மாதா தாயாரை வணங்குகின்றனர்
ஏன் இப்படி என அந்த நண்பர் வினா எழுப்ப எங்களது கிறித்துவ நண்பர்கள் அவரிடம் பல பதில்களை கூறியும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் வினவிக்க .... அங்கு அமர்ந்து இருந்த நானோ அங்கிருந்து எதோ ஒரு சிந்தனையுடன் சற்று தூரம் நகர்ந்து சென்று சிறுது நேரம் கழித்து வினவியரிடமே ஒரு கேள்வியை எழுப்பினேன்....
"உலகை காக்கும் கடவுள் என அழைக்கப்படும் பெருமாளின் அவதாரமான கிருஷ்ண பரமாத்மாவை அனைவரும் வணங்க ... அவரது தாயாரை ஏன் நம்மில் சிலர் மட்டும் பாடல்களின் மூலம் போற்றுகின்றோம்"??
நான் கேட்ட கேள்விக்கு இன்றுவரையிலும் எனக்கு பதில் கிட்டவில்லை. எனினும் என் கேள்வி தவறு இல்லை என்றே எண்ணுகின்றேன் !!!
(குறிப்பு: தாயார் -- வாசுகி மற்றும் யசோதா இருவரைக்கும் குறிக்கும்)
P.Mahalakshmi.
(குறிப்பு: தாயார் -- வாசுகி மற்றும் யசோதா இருவரைக்கும் குறிக்கும்)
P.Mahalakshmi.
👏👏👏👌👌
ReplyDeleteI think every god relates to one single entity its force law of attraction.ones you understand the way how force works u can believe every god.i believe in force when I go to church,majith and temple I only pray that force postive energy in there.postive energy is the matter when go to any religion temple we feel good inside that's positive energy in there in hindu temple they praise the Lord with mantras,in church with Bible,in majith with quran that create positive energy for more info ping me
ReplyDeleteYes I can understand !! Thank you for the information
Delete